நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலா திரெங்கானு மாநாகர மன்றப் பகுதியில் செயல்படும் சூப்பர் மார்கேட், பேரங்காடிகள் ஹரி ராயா பெருநாளன்று மூடப்படும்  

கோலா திரெங்கானு: 

கோலா திரெங்கானு மாநாகர மன்றப் பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்து வணிக வளாகங்கள், பேரங்காடிகள் மற்றும் சூப்பர் மார்க்கேட்டுகள் ஹரி ராயா பெருநாளன்று மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

துரித உணவு வளாகங்கள், 24 மணி நேர கடைகள், 7 இலேவன், ட்ரீலீஃப் மார்ட், டிஐவை, இக்கோ ஷாப் ஆகிய கடைகள் நள்ளிரவு 12 மணி முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக கோலா திரெங்கானு மாநாகர மன்றத்தின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

வணிக கட்டடங்களின் நிர்வாகத்திற்கும் உரிமையாளர்களுக்கும் இந்த உத்தரவு தொடர்பான அறிவிப்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கோலா திரெங்கானுவின் மேயர் ரோஸ்லி லத்தீஃப் கூறினார்.

முஸ்லீம் அல்லாத வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவோர் பிற்பகல் 1 மணி வரை தங்கள் வணிக வளாகங்களை மூட ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இந்த வணிக வளாகத்தை மூடுவது முஸ்லீம் தொழிலாளர்களை மதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

இந்த அறிவுறுத்தல்களைக் கடைபிடிக்கத் தவறும் வளாக உரிமையாளர்கள் மற்றும் முஸ்லிம் வணிக நடத்துநர்கள் வணிக உரிமங்களை ரத்து செய்வது உட்பட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்  என்று அவர் குறிப்பிட்டார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset