நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளந்தானில் 38,600 ரிங்கிட் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்

பாசிர் மாஸ்: 

ஜனவரி மாதத் தொடக்கத்திலிருந்து நேற்று வரை முறையான அனுமதியின்றி வைத்திருந்த 38,600 வெள்ளி மதிப்புள்ள பட்டாசுகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

இதுவரை முறையான அனுமதியின்றி பட்டாசுகள் விற்பனை தொடர்பாக 11 சம்பவங்கள் குறித்துக் காவல்துறையினர் புகார் பதிவு செய்துள்ளனர். 

பறிமுதல் செய்த 11 வழக்குகளை கிளந்தான் போலீசார் பதிவு செய்துள்ளனர்.

பாசிர் மாஸ், தும்பா, ஜெலி, மாச்சாங், குவா முசாங் மற்றும் பாசிர் புத்தே ஆகிய இடங்களில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிளந்தான் காவல்துறைத் தலைவர் டத்தோ முஹம்மர் ஜாக்கி ஹருன் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் தங்கள் வருமானத்தை அதிகரிக்க உள்ளூர் விநியோகிப்பாளரிடமிருந்து பட்டாசுகளைப் பெற்று அவற்றை விற்பனை செய்யும் சிறு வணிகர்கள் என்று நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.

கடந்த சனிக்கிழமை மாச்சாங்கில் சமீபத்திய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, 18 மற்றும் 51 வயதுடைய இரண்டு ஆண்கள் மாச்சாங்கிலுள்ள டத்தாரான் கெமாக்கோத்தாஹன் சந்தையில் சரியான அனுமதியின்றி பட்டாசுகளை விற்றதற்காக கைது செய்யப்பட்டனர்.

காவல்துறையினர் அக்கடையில் சோதனை மேற்கொண்ட போது 1,730 வெள்ளி மதிப்புள்ள பட்டாசுகள் கண்டுபிடிக்கப்பட்டபோது இருவரும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset