நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென். யுனைடெட் - லிவர்பூல் சமநிலை

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீல் கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல் அணிகள் சமநிலை கண்டன.

ஓல்டு டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் லிவர்பூல் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டன.

மென்செஸ்டர் யுனைடெட் அணியின் கோல்களை புருனோப பெர்னாண்டஸ், கோபி மைய்னோ ஆகியோர் அடித்தனர்.

லிவர்பூல் அணியின் கோல்களை லூயிஸ் டியாஸ், முமகத் சாலா ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் செல்சி அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் சிப்பீல்டு யுனைடெட் அணியுடன் சமநிலை கண்டனர்.

டோட்டன்ஹாம் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் நோட்டிங்ஹாம் போரஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset