நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காலணி சின்னம் விவகாரத்தை இனப் பிரச்சனையாக்க வேண்டாம்: எம்சிஎம்சி எச்சரிக்கை

பெட்டாலிங் ஜெயா:

அல்லாஹ் என்ற வார்த்தைக்கான அரபு எழுத்துக்களை ஒத்துப் போவதாக கூறப்படும் சின்னம் கொண்ட காலணிகள் குறித்து இனம், மதம் மற்றும் ஆட்சியாளர்களின் உணர்திறனைத் தொடும் சமூக ஊடக உள்ளடக்கத்தைப் பதிவேற்றவோ, பகிரவோ வேண்டாம் என்று தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது போன்ற தகவலைப் பதிவேற்றம் செய்பவர்களுக்கு எதிராக தகவல் தொடர்பு மற்றும்  பல்லூடகச் சட்டம் 1998-இன் கீழ் நடவடிக்கை எடுப்பதில் சிறிதும் தயக்கம் காட்ட மாட்டோம் என்றும் அவ்வாணையம் ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது. 

இனப் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பதிவுகள் மற்றும் கருத்துகளை வெளியிடுவதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். 

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த அனைத்துத் தரப்பினரும் மலேசியாவின் இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (ஜாக்கிம்) மற்றும் அதிகாரிகளுக்கு இடம் கொடுக்க வேண்டும்.

இந்தச் சிக்கலைப் பற்றி சமூக ஊடகங்களில் ஏதேனும் தகவலைக் கொண்டிருக்கும் எந்தவொரு தரப்பினரும் காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து புகாரளிக்குமாறு எம்சிஎம்சி வலியுறுத்தியது.

முன்னதாக, ஆடவர் ஒருவர் தனது மனைவிக்காக வாங்கிய ஒரு ஜோடி வெர்ன்ஸ் காலணியில் அல்லாஹ் என்ற வார்த்தை இருந்ததாக சமூக ஊடகங்களில் கூறியதை அடுத்து இந்தப் பிரச்சினை வைரலானது.

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் 8 புகார்கள் காவல்துறைக்குக் கிடைத்ததாகத் தேசிய காவல்துறை தலைவர் ரஸாருடின் ஹுசைன் கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 298 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 இன் கீழ் இந்தப் பிரச்சனையை விசாரிக்க ஒரு விசாரணை ஆவணம் திறக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset