நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோ அப்துல் ரசூல் ஆதரவில் 500 பேருக்கு நோன்பு கஞ்சி: மின்னல் எப்எம் வழங்கியது

கோலாலம்பூர்:

டத்தோ அப்துல் ரசூல் ஆதரவில் 500 பேருக்கு நோன்பு கஞ்சியை மின்னல் எப்எம் வழங்கியது.

லெபோ அம்பாங் வட்டார மக்களுக்கு இந்த நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.

மின்னல் எப்எம் ஒவ்வொரு மாதமும் ஜோம் சந்திப்போம் என்ற அடிப்படையில் மக்களை சந்தித்து வருகிறோம்.

அவ்வகையில் இம்முறை மக்களுக்கு நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.

மின்னல் அறிவிப்பாளர்கள் நேரடியாக மக்களை சந்தித்து நோன்பு கஞ்சியை வழங்கினர்.

இவ்வேளையில் இந்நிகழ்வுக்கு பெரும் ஆதரவு வழங்கிய அப்துல் ரசாக் நகைக்கடையின் உரிமையாளர் டத்தோ அப்துல் ரசூலுக்கு மின்னல் எப்எம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது என்று அதன் நிர்வாகி ரோகினி சுப்பிரமணியம்  கூறினார்.

நோன்பு பெருநாள் அடுத்த வாரம் கொண்டாடப்படவுள்ளது.

இதன் அடிப்படையில் நோன்பு கஞ்சி வழங்குவது அன்பளிப்பு வழங்குவது என பல நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

இதுபோன்ற நடவடிக்கைகள் மக்களுக்கு பெரும் பயனாக அமைகிறது.

அவ்வகையில் மின்னல் எப்எம்முடன் இணைந்து 500 பேருக்கு நோன்பு கஞ்சி வழங்கியதில் மகிழ்ச்சி என்று டத்தோ அப்துல் ரசூல் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset