நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அக்மால், ஸம்ரி வினோத் உட்பட நால்வருக்கு சபா, சரவாக்கில் நுழைய தடை விதிக்க வேண்டும்

கோலாலம்பூர்:

அக்மால், ஸம்ரி வினோத் உட்பட நால்வருக்கு சபா, சரவாக்கில் நுழைய தடை விதிக்க வேண்டும்.

சரவா மக்கள் அஸ்பிராஸி இயக்கம், சபா மூதாதையர் நிலங்களின்  பாதுகாவலர் அமைப்பு ஆகியவை இதனை வலியுறுத்தி உள்ளன.

அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் முஹமட் அக்மல் சாலே உட்பட  நான்கு பேர்,

இந்த நாட்டில் அதிகரித்து வரும் இன மதப் பதற்றம், சமூக முரண்பாடுகளைத் தூண்டுபவர்களாக விளங்குகின்றனர்.

இதில் முகமட் ரிதுவான் டீ அப்துல்லா, ஃபிர்தௌஸ் வோங், முஹம்மது ஜம்ரி வினோத் காளிமுத்து, சியாகிர் நசோஹா ஆகியோரும் அதில் அடங்குவர்.

இவர்கள் அனைவரும் இரு மாநிலங்களுக்குள் நுழைவதைத் தடை செய்ய வேண்டும். 

குறிப்பாக குடிநுழைவுத் துறையின் கறுப்பு பட்டியலில் அவர்கள் இடம் பெற வேண்டும்.

இன மத சகிப்பின்மையால் தூண்டப்பட்ட எதிர்ப்புகள் மற்றும் புறக்கணிப்புகளைத் தூண்டும் நபர்களுக்கு எதிரான நடவடிக்கையாக இது இருக்க வேண்டும்.

சரவா மக்கள் அஸ்பிராஸி இயக்கத்தில் தகவல் பிரிவு தலைவர் பீட்டர் ஜோன் ஜபான், சபா மூதாதையர் நிலங்களின்  பாதுகாவலர் அமைப்பின் பிரதிநிதி அட்டாமா கட்டமா ஆகியோர் இதனை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset