நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படும்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான அடுத்தக் கட்ட இலக்குகள் குறித்து இந்தோனேசிய அதிபர் பிராபோவோ சுபியான்தோவுடன் இன்று நடத்தப்பட்ட சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

புத்ராஜெயாவிலுள்ள தமது அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது தங்களின் பணி தொடர்பான அனுபவங்களையும் கருத்துகளையும் பரிமாறிக் கொண்டதாக அவர் தெரிவித்தார். 

இருவரின் அரசியல் பயணம் ஏறக்குறைய ஒரே நிலையில் தான். 

பதவி ஏற்பதற்கு முன்னர் பல்வேறு சவால்களை இருவரும் எதிர்கொண்டது குறித்தும் கோலாலம்பூரிலுள்ள விக்டோரியா கல்லூரியில் பயிலும் போது ஏற்பட்ட அனுபவங்களையும் பிராபோவோ
நினைவுக் கூர்ந்ததாக அன்வார் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். 

விரைவில் எட்டாவது அதிபராக பதவியேற்கவிருக்கும் பிராபோவோவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட அன்வார், இரு தரப்பின் எதிர்கால நலன்களுக்காக இவ்விரு அண்டை நாடுகளுக்கிடையிலான உறவு தொடர்ந்து வலுப்பெறும் எனத் தாம் நம்புவதாகக் கூறினார்.

இந்தோனேசியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரின் மலேசியாவுக்கான ஒரு நாள் சிறப்பு வருகையின் ஒரு பகுதியாகப் பிரபோவோவின் இந்தப் பயணம் அமைந்துள்ளது

2024-2029-ஆம் தவணைக்கான இந்தோனேசியாவின் அதிபராக பிராபோவோ தேர்ந்தெடுக்கப்பட்டதாகல் கடந்த மார்ச் 20ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset