நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரச மன்னிப்பின் கூடுதல் ஆவணங்கள்  குறித்து எந்தத் தகவலும் தெரியாது: சைஃபுடின் நசுத்தியோன் 

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டிலேயே அனுப்பவிக்க அனுமதித்த அரச மன்னிப்பின் கூடுதல் ஆவணங்கள் குறித்துத் தனக்கு எந்தத் தகவலும் தெரியாது என்று உள்துறை அமைச்சர் சைஃப்புடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார். 

எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டிலேயே கழிக்க நஜிப்பின் விண்ணப்பக் கடிதம் மட்டுமே தனக்குக் கிடைத்ததாக அவர் கூறினார்.

புத்ராஜெயாவில் உள்ள உள்துறை அமைச்சகத்தில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூடுதல் ஆவணங்கள் தொடர்பான எந்தத் தகவலும் தன்னிடம் இல்லை என்று அவர் தெரிவித்திருக்கின்றார். 

நஜிப் தனது 6 ஆண்டு சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டிலேயே அனுபவிக்க அனுமதிக்கும் அரச மன்னிப்பில் கூடுதல் சேர்க்கை பெற்றதாக நேற்று நஜிப் கூறியது குறித்து சைபுடின் கருத்து தெரிவித்தார்.

ஏப்ரல் 1-ஆம் தேதி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதித்துறை மறுஆய்வு மனுவில் நஜிப் நேற்று இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

நீதித்துறை மறுஆய்வில், குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த உள்துறை அமைச்சர், சட்டத்துறை தலைவர், மன்னிப்பு வாரியம், மத்திய அரசு மற்றும் பல பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறு அவர் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.

நீதித்துறை மறுஆய்வு விண்ணப்பத்தின் நகலின் படி, கூடுதல் ஆவணங்கள்  ஜனவரி 29-ஆம் தேதி மாமன்னரால் வழங்கப்பட்டதாக நஜிப் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset