நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

4 மாநில அரசு ஊழியர்களுக்கு பெருநாள் உதவித் தொகை

கோலாலம்பூர்:

நோன்பு பெருநாளை முன்னிட்டு 4 மாநில அரசு ஊழியர்களுக்கு பெருநாள் உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவி அடுத்த செவ்வாய்கிழமைக்கு முன் வழங்கப்படும். இதற்கு  மொத்தம் 5.3 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. 

கவுன்சிலர்கள், பெங்குலு, அர்மாலா மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர்கள், விடுதி ஆசிரியர்கள், அல் குர்ஆன் ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள் உட்பட அரசியல் நியமனம் பெற்றவர்களும் 250 ரிங்கிட்டை பெறுவார்கள் என்று மாநில மந்திரி புசார் முகமத் நஸ்ரூடின் தாவூத் கூறினார்.

கெடாவில் 5,221 அரசு பணியாளர்களுக்கு தலா 500 ரிங்கிட் வழங்கப்படும். 

வரும் திங்கட்கிழமை இத்தொகை செலுத்தப்படும். இதற்காக 2.61 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்று மந்திரி புசார் முகமத் சனுசி கூறினார்.

நெகிரி செம்பிலானில் 6,000 அரசு பணியாளர்களுக்கு 500 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்படும் என்று மாநில மந்திரி புசார் அமினூடின் ஹரூன் கூறினார்.

பெர்லிஸ் மாநிலத்தில் அரசு பணியாளர்களுக்கு 500 ரிங்கிட்டும் ஓய்வு பெற்றவர்களுக்கு 250 ரிங்கிட்டும் வழங்கப்படும் என்று மந்திரி புசார் முகமத் சுக்ரி ரம்லி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset