நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனுமதியின்றி அல் குர்ஆனை அச்சிட்டதற்காக 164 நபர்கள் கைது

புத்ராஜெயா:

ஓப்ஸ் மூலியா நடவடிக்கையின் வாயிலாக கடந்த மார்ச் மாதம் முதல் 12,767 பிரதிகள், 6,962 சான்றளிக்கப்படாத அல் குர்ஆன் பிரதிகளை பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் மொத்த மதிப்பு 2.8 மில்லியன் ரிங்கிட்டாகும் என்று உள்துறை அமைச்சின் அமலாக்க, கட்டுப்பாட்டுப் பிரிவின் செயலாளர் நிக் யுஸ்மி யூசுப் கூறினார்.

அனைத்து கையெழுத்துப் பிரதிகளையும் பறிமுதல் செய்வதற்கு முன்பு 1,082 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

அல் குர்ஆனின் சான்றளிக்கப்படாத பிரதிகள் இருப்பதைக் கட்டுப்படுத்த இந்த ஓப்ஸ் மூலியா நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அல் குர்ஆனைத் தவிர ஆடியோ, மின்சார உபகரணங்கள், கட்டப்படாத அல் குர்ஆன் கையெழுத்துப் பிரதிகள், அல் குர்ஆன் வசனங்களின் சட்டங்கள், மரத்தில் அச்சிடப்பட்ட பிரதிகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தில் வணிகர்கள், விநியோகஸ்தர்கள், முஸ்லிம் அல்லாத நபர்கள் என மொத்தம் 164 பேர் கைது செய்யப்பட்டனர்.

முஸ்லிமல்லாதவர்களால் அச்சிடப்பட்ட பல்வேறு பிழைகளுடன் ஒரு பிரதிக்கு  600 ரிங்கிட் வரை விற்கப்பட்ட அல் குர்ஆன் பிரதிகளும் கைப்பற்றப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset