நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சித்தார்தனின் Rhythm & Swaram இசை நிகழ்ச்சி: அதிகாரப்பூர்வ இணைய ஊடகமாக நம்பிக்கை இணைந்தது

கோலாலம்பூர்:

மலேசிய இசை துறையில் அனைவருக்கும் நன்கு அறிமுகமான பின்னனி பாடகர் சித்தார்தன் அவர்களின் ஏற்பாட்டில் Rhythm & Swaram நிதி திரட்டும் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 

சுக்ரா புரோடக்‌ஷன் வழங்கும் இந்த இசை நிகழ்ச்சி வருகின்ற ஜூன் மாதம் 22-ஆம் தேதி, மிட்லேண்டஸ் பன்நோக்கு மண்டபத்தில் மாலை ஆறு மணி நடைபெறவுள்ளது. 

குழந்தைகளின் கல்விக்காகவும் அவர்களின் நலனுக்காக முன்னெடுக்கப்படும் இந்த இசை நிகழ்ச்சியில் பாடகர் சித்தார்தனுடன் இணைந்து அவரது இசை வகுப்பில் பயிற்சி பெற்று வரும் இளம் பாடர்களும் தங்களின் திறனை வெளிப்படுத்தவுள்ளனர். 

மேலும், இளம் பாடகர்களை அங்கீகரிக்கும் விதமாக இந்நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதையும் சித்தார்தன் தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சிக்கான நுழைவு கட்டணம் 100 வெள்ளியாகும்.'

இந்நிகழ்ச்சியில் மற்ற இசை கலைஞர்களும் கலந்து கொள்ளும் நிலையில் இந்த இசை நிகழ்ச்சியை ஆனந்தா தொகுத்து வழங்கவுள்ளார். 

பொதுமக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு தருமாறு சித்தார்தன் கேட்டுக் கொண்டார். 

இந்நிலையில், இந்த இசை நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம், நம்பிக்கை இணைய ஊடகம் அதிகாரப்பூர்வ ஊடகமாக இணைந்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset