நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வரி செலுத்தாத 182,666 பேரின் வெளி நாட்டுப் பயணங்களுக்குத் தடை: லிம் ஹுய் யிங்

கோலாலம்பூர்: 

பிப்ரவரி 29-ஆம் தேதி வரை மீதமுள்ள வரியைச் செலுத்த தவறிய 182,666 பேரின் வெளிநாட்டுப் பயணங்களை உள்நாட்டு வருமான வரி வாரியம் தடை செய்துள்ளதாகத் துணை நிதியமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்தார். 

மொத்த எண்ணிக்கையில் 171,571 பேர் மீதமுள்ள வருமான வரியைச் செலுத்த தவறியுள்ளனர். மேலும், 11,095 பேர் மீதமுள்ள சொத்து வரியைச் செலுத்த தவறியுள்ளனர். 

பொதுவாக எந்தவொரு பயணக் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, வரி செலுத்துவோர் மீது உள்நாட்டு வருமான வரி வாரியம் மீது நடவடிக்கை எடுக்கும் என்று அவர் கூறினார்.

குறிப்பிட்ட காலத்திற்குள் மீதமுள்ள வரியைச் செலுத்தத் தவறினால், வரி செலுத்துவோர் வெளிநாட்டு பயணத்திற்கு கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார் அவர். 

வரி செலுத்தாத நபர்களுக்கு வருமான வரி வாரியம் அமல்படுத்திய பயணக் கட்டுப்பாடுகளின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களைக் கேட்ட செனட்டர் ரோஸ் சூர்யாதி அலங்கின் கேள்விக்குத் துணையமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

வரி செலுத்துவோர் மைடேக்ஸ் தளத்தில் தாங்கள் செலுத்த வேண்டிய மீதப் பணத்தைத் தெரிந்து கொள்ளலாம். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset