நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மேலவையிலும்  சர்ச்சையான மித்ரா விவகாரம்;  பெமாண்டுக்கு முன்னுரிமை ஏன்?: டத்தோ நெல்சன்

கோலாலம்பூர் -

மக்களவையை தொடர்ந்து மித்ரா விவகாரம் மேலவையிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மித்ராவுக்கும் பெமாண்டுக்கும் என்ன தொடர்பு. பெமாண்டுக்கு முன்னுரிமை வழங்குவது ஏன் என்று செனட்டர் டத்தோ நெல்சன் கேள்வி எழுப்பினார்.

மேலவைக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் ஏரன் அகோ மித்ரா தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.

அப்போது மித்ரா தொடர்பான கூட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள் அழைக்கப்படுவது இல்லை என்று செனட்டர் லிங்கேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் 4 மணிக்கு கூட நாடாளுமன்றத்தில் மித்ரா தொடர்பில் கூட்டம் நடக்கிறது. அங்கே வாருங்கள் என்றார்.

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனும் இதில் உள்ளார்.

மேலும் மித்ராவை வழிநடத்துவதில் எனக்கு தனிப்பட்ட ஆர்வம் இல்லை. அமைச்சர் என்ற முறையில் என் கடமையை செய்கிறேன் என்றார்.

அமைச்சரின் பதிலால் அதிருப்தியடைந்த செனட்டர் நெல்சன்,

மித்ரா விவகாரத்தில் அறிக்கைகளை அமைச்சர் பார்த்து, கவனித்து வெளியிட வேண்டும்.

ஆரம்பத்தில் மித்ராவை வழிநடத்த ஆர்வம் இல்லை. அரசியல் தலைவர்கள் வேண்டாம் என்று அமைச்சர் கூறினார்.

ஆனால் இப்போது பத்து நாடாளூமன்ற உறுப்பினர் பிரபாகரன் உள்ளார் என்கிறார்.

அதே வேளையில் மித்ராவுக்கும் பெமாண்டுக்கும் என்ன தொடர்பு. ஏன் எதற்கு எடுத்தாலும் பெமாண்டு குறித்து பேசுகிறார்.

பெமாண்டு மீது உள்ள நம்பிக்கை கூட தற்போது ஆட்சியில் இருக்கும் இந்திய தலைவர்கள் மீது இல்லையா என்று செனட்டர் டத்தோ நெல்சன் காரசாரமான கேள்விகளை முன்வைத்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset