நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேகே மார்ட் விவகாரத்தில் அக்மால் பின்வாங்க வேண்டும்: கைரி வலியுறுத்து

கோலாலம்பூர்:

அல்லாஹ் காலுறை விவகாரம் தொடர்புடைய கேகே மார்ட் விவகாரத்தில் இருந்து அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சாலே பின்வாங்க வேண்டும்.

முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் இதனை வலயுறுத்தினார்.

இந்த விவகாரத்தில் கேகே மார்ட் சங்கிலி மன்னிப்பு கேட்ட போதிலும், அக்கடையை நாடு தழுவிய புறக்கணிப்புக்காக அக்மால் தொடர்ந்து பகிரங்கமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

தனது இந்த அழைப்புக்கும் அரசியல் லாபம் ஈட்டுவதில் எந்த தொடர்பும் இல்லை.

மாறாக, இஸ்லாத்தை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என்று மெர்லிமாவ் சட்டமன்ற உறுப்பினர் அவர் கூறியுள்ளார்.

அக்மால் ஏன் இந்தப் பிரச்சினையை தொடர்ந்து சர்ச்சையாக்கி வருகிறார் என்பதை நான் முழுமையாக அறிந்திருக்கிறேன்.

அம்னோ இளைஞர் தலைவர் என்ற முறையில் அவர் மலாயாவின் ஹீரோ ஆக வேண்டும் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம்.

ஆனால் இந்த விவகாரத்தில் அக்மால் பின்வாங்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

போலீஸ் விசாரணைக்கு பின் கேகே மார்ட் உரிமையாளர்கள் மீது நீதிமன்றத்திலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த பிரச்சினை தொடர்ந்தால் முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்களுக்கு இடையிலான உறவுகளை பாதிக்கலாம்.

கெலுவார் செகஜாப் நிகழ்வில் பேசிய கைரி ஜமாலுடின் மேற்கண்டவாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset