நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அல்லாஹ் காலுறைகள் விவகாரத்தில் அக்மால் நிலைப்பாட்டை ஆதரிக்கிறேன்: மலாக்கா முதல்வர்

மலாக்கா:

அல்லாஹ் காலுறைகள் விவகாரத்தில் அம்னோ இளைஞர் அணித் தலைவர் அக்மாலின் நிலைப்பட்டை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.

மலாக்கா மாநில முதல்வர் டத்தோஸ்ரீ அப் ரவூப் யூசோ இதனை தெரிவித்தார்.

இஸ்லாத்தின் புனிதத்தை உறுதி செய்வதற்கும், மலாய்க்காரர்களின் கண்ணியம் ஒட்டுமொத்தமாகப் பாதுகாக்கப்படுவதற்கும் டாக்டர் அக்மல் சந்தேகத்திற்கு இடமின்றி வலுவான காரணங்களைக் கொண்டுள்ளார்.

அல்லாஹ் என்ற வார்த்தையைத் தாங்கிய காலுறைகள் விவகாரத்தை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல் மார்க்கப் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்.

அரசியல் விவகாரம் சமயம் குறித்த நமது நிலைப்பாட்டை மாற்றாது. நாம் அரசியலில் ஒன்றாகச் செயல்படலாம்.

இதன் மூலம் ஒரு நல்ல நாட்டை ஒன்றாகக் கட்டியெழுப்ப முடியும், ஆனால் இந்த மத விஷயம் மிகவும் உணர்திறன் கொண்டது.

அல்லாஹ் என்ற வார்த்தைக்கு முஸ்லிம்கள் மத்தியில் அதிக மதிப்பு உண்டு என்பது அனைவரும் அறிந்ததே.

எனவே, அதைக் காலில் அணிந்திருக்கும் சாக்ஸ் மீது வைக்கும்போது, மலாக்காவில் உள்ள  முஸ்லிம்கள் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள்  வேதனைப்படுவார்கள்.

அக்மாலின் குரல் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

ஏனென்றால் சமூக சூழலில் ஒருவருக்கொருவர் மத உரிமைகளை மதிக்க நாங்கள் ஒப்புக்கொண்டோம்  என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset