நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அந்நிய செலவாணி சந்தையில் நிதிகளை செலுத்த அரசு துணை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை: பிரதமர்

புத்ராஜெயா:

அந்நிய செலவாணி சந்தையில் நிதிகளை செலுத்து தொடர்பில் அரசாங்கமும் பேங்க் நெகாராவும் பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளது.

அரசாங்கத்தின் துணை நிறுவனங்களான ஜிஎல்ஐசி, ஜிஎல்சி ஆகிய நிறுவனங்களுடன் இப் பேச்சுவார்த்தை முடக்கி விடப்பட்டுள்ளது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

தேசியப் பொருளாதார நடவடிக்கை கவுன்சிலின் இந்த ஆண்டின் இரண்டாவது கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

பேங்க் நெகாரா கவர்னர் டத்தோ அப்துல் ரஷீத் அப்துல் கபூர், அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் செயல்திறன் தொடர்ந்து மேம்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் அறிவிப்புகளுக்கு இணங்க  அரசு, பேங்க் நெகாரா, ஜிஎல்ஐசி, ஜிஎல்சிகள் ஒருங்கிணைக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அமெரிக்க பணவீக்கம் மிகவும் சமாளிக்கக்கூடியது.

இந்த ஆண்டு அமெரிக்க நாணயக் கொள்கையை இயல்பாக்கும் திட்டம் அமெரிக்க டாலர் மதிப்பைக் கட்டுப்படுத்தும்.

மேலும் அன்று 4.7773 ஆக இருந்த ரிங்கிட்டின் மதிப்பு இன்று 1.4 சதவீதம் அதிகரித்து 4.7135 ஆக உயர்ந்துள்ளது.

இருப்பினும், உலக நிதிச் சந்தையின் நிச்சயமற்ற தன்மை, பணவியல் கொள்கை, வரை உள்ளூர் நாணயத்தின் மதிப்பை தொடர்ந்து பாதிக்கும் என்று பிரதமர் தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset