நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரமலான் சந்தையில் பழைய உணவு விற்பனை: மாநிலச் சுகாதாரத் துறை நடவடிக்கை

ஜொகூர் பாரு:

ரமலான் சந்தையில் விற்கப்பட்ட பழைய உணவால் ஏற்பட்ட உணவு நஞ்சுதன்மை தொடர்பான 3 குற்றச்சாட்டுகள் குறித்து ஜொகூர் மாநில சுகாதாரத் துறை கடுமையாகக் கண்டிருக்கின்றது. 

பழைய உணவு விற்பனை தொடர்பாக மெர்சிங்கில் ஒரு புகாரும் ஜொகூர் பாருவில் இரு புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநில சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் லிங் தியான் சூன் கூறினார்.

பொதுமக்கள் ரமலான் சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீட்டை ஸ்கேன் செய்து புகார் அளித்துள்ளதையும் அவர் குறிப்பிட்டார். 

இந்நிலையில், கிடைக்கப்பெற்ற புகார்கள் விசாரிக்கப்படும். பின் புகாரளிக்கப்பட்டவை உண்மையாக இருப்பின் சம்பந்தப்பட்ட வணிகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

வணிகர்கள் உணவு சுகாதார விதிகள் 2009-ஐ மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். 

உணவு சுகாதார விதிகள் 2009-க்கு இணங்காத பல்வேறு குற்றங்களுக்காக ரமலான் சந்தையில் வியாபாரிகளுக்கு நோன்பின் முதல் வாரத்தில் 49 நோட்டிஸ்களை வெளியிட்டுள்ளது.

ரமலான் முதல் வாரத்தில் சந்தையில் உள்ள மொத்தம் 1,399 உணவு வளாகங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset