நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசிரியர் உட்பட 320 கல்வியமைச்சு ஊழியர்கள் பணி நீக்கம்: ஃபட்லினா

கோலாலம்பூர்:

ஆசிரியர்கள் உட்பட கல்வி அமைச்சின்
மொத்தம் 320 ஊழியர்கள் கடமை தவறியதற்காக  பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2019 முதல் 2023 வரை இந்த எண்ணிக்கை பதிவாகி உள்ளது என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் மக்களவையில் கூறினார்.

இந்தக் காலகட்டத்தில் பணிக்கு வராத ஊழியர்கள் சம்பந்தப்பட்ட துறைகளின் தலைவர்களிடமிருந்து 1,303 புகார்களை பெற்றதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டின் இறுதி வரை, கல்வியமைச்சு பணியாளர்கள் இல்லாதது தொடர்பான துறைத் தலைவர்களிடமிருந்து மொத்தம் 1,303 புகார்களை  பெற்றுள்ளது.

அந்த எண்ணிக்கையில், 320 வழக்குகள் ஒழுங்குமுறை, பொது அதிகாரிகள் நடத்தை - ஒழுக்கம் விதிமுறைகள் 1993 ஆகியவற்றின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்டன.

கல்வி அமைச்ச்சில்  பணிபுரியும் ஆசிரியர்களின் பணி நெருக்கடி தொடர்பில் லாபிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பாங் ஹோக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமைச்சர் ஃபட்லினா மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset