நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2026-ஆம் ஆண்டு முதல் ஜனவரி மாதத்தில் பள்ளி தவணை தொடங்க கல்வியமைச்சு இலக்கு: ஃபட்லினா சிடேக்

கோலாலம்பூர்: 

2026-ஆம் ஆண்டு முதல் பள்ளி தவணை ஜனவரியில் தொடங்க கல்வியமைச்சு இலக்குக் கொண்டுள்ளதாக கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் மேலவையில் என்று இன்று தெரிவித்தார்.

மீண்டும் புதிய பள்ளி அமர்வுகளை ஜனவரி மாதத்திலிருந்து தொடங்குவதற்கான கல்வியமைச்சின் நீண்டகாலத் திட்டம் குறித்து செனட்டர் டான்ஸ்ரீ முஹம்மத் பாத்மி சே சலேயின் துணைக் கேள்விக்குக் கல்வியமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். 

தற்போது மார்ச் மாதம் தொடங்கும் பள்ளி தொடக்க அமர்வு 2026-ஆம் ஆண்டு தொடங்கி ஜனவரிக்கு மாற்றப்படும். 

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2022-ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதத்தில் பள்ளி அமர்வுகள் தொடங்கப்பட்டன. 

2026-ஆம் ஆண்டிற்கான பள்ளி அமர்வு ஜனவரி முதல் டிசம்பர் வரை நடைபெறுவதை உறுதி செய்வதற்காக 2024/2025 கல்வி நாட்காட்டியை பிப்ரவரி 2025-ஆம் ஆண்டில் தொடங்க அரசாங்கம் முயற்சிகளைத் தொடங்கியுள்ளதாக திங்களன்று துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ மக்களவையில் தெரிவித்தார்.

இதற்கிடையில், கட்டாயக் கல்வியை மேல்நிலைப் பள்ளி மட்டத்திற்கு நீட்டிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த தனது அமைச்சகம் தீவிரமாக செயல்பட்டு வருவதாகப் ஃபட்லினா கூறினார்.

கல்விச் சட்டம் 1995 இல் திருத்தங்களைத் தயாரிப்பதற்கு முன், கொள்கை ஒப்புதலைப் பெறுவதற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் திட்டம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

மற்ற தொடர்புடைய அமைச்சகங்களிடமிருந்து கருத்துக்களைச் சேகரிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ள நிலையில் செயல்முறை முடிந்ததும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். 

மலேசியாவில் இடைநிலைப் பள்ளிக் கல்வியைக் கட்டாயமாக்குவதற்கான கொள்கையின் சமீபத்திய நிலை மற்றும் இடைநிற்றலைத் தடுப்பதற்கான முழு அமலாக்கத்திற்கான இலக்கு குறித்துச் செனட்டர் டத்தோ டாக்டர் ஆர். நெல்சனின் கேள்விக்குப் ஃபட்லினா பதிலளித்தார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset