நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திரங்கானுக்கான நியாயமான பங்கை ஒற்றுமை அரசு நிராகரித்ததில்லை: பிரதமர் அன்வார் 

புத்ராஜெயா:

மத்திய அரசின் மானியத்தை எந்த மாநிலத்திற்கும் வழங்குவதை ஒற்றுமை அரசாங்கம் ஒருபோதும் நிறுத்தியதில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

மாறாக, இவ்வாண்டிற்கான மானியம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு 155 கோடி வெள்ளியாகயிதிரங்கானு மாநிலத்திற்கான மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு இவ்வாண்டில் 159 கோடி வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் கூட்டரசு அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் திரெங்கானு மாநிலத்திற்கு வழங்கப்பட்ட மானியம் முந்தைய அரசாங்கம் வழங்கியதை விட அதிகமாகும் என்று இன்று இங்கு நடைபெற்ற நிதியமைச்சின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில் அவர் தெரிவித்தார்.

தனது தலைமையிலான மத்திய அரசாங்கம் திரங்கானு மாநிலத்திற்கு எதிராக குரோத மனப்பான்மையுடன் நடந்து கொண்டதில்லை. 

கடந்த 2023-ஆம் ஆண்டு பெட்ரோலிய வருமானத்தின் அடிப்படையில் உதவித்தொகை நிதியாக சுமார் 78 கோடி வெள்ளியை திரங்கானுவுக்கு மத்திய அரசு வழங்கியது என நிதியமைச்சருமான அவர் குறிப்பிட்டார். 

மேம்பாட்டு நிதி உதவித் தொகையை விட அதிகமாகும். ஆனால், அந்த நிதி நேரடியாக மக்கள் நலத் திட்டங்களுக்குச் செலவிடப்பட்டது என்றார் அவர்.

அவசரச் சூழல்களில் குறிப்பாகத் தாசேக் கென்யீர் மண்சரிவு போன்ற பாதிப்புகளைச் சரி செய்யும் திட்டங்களை விரைவுபடுத்த தொடர்ந்து நிதியுதவி வழங்கி வருவதையும் அன்வார் தெளிவுப்படுத்தினார்.  

பாஸ் அல்லது பெர்சத்து வசமுள்ள தொகுதிகள் என்ற பேதமின்றி அனைத்துத் தொகுதிகளுக்கும் மானியம் கிடைப்பதை உறுதி செய்யும்படி ஐசியு எனப்படும் அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவு தாம் பணித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset