நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காஜாங்கில் 14.15 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது

காஜாங்:

காஜாங்கில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை போலீசார்  சோதனை செய்தபோது 14.15 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த சம்பவத்தில் இரண்டு ஆடவர்களை போலீசார் கைது செய்தனர் என்று புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் காவ் கோக் சின் கூறினார்.

33 மற்றும் 44 வயதுடைய இருவர், கடந்த ஆண்டு முதல்  போதைப் பொருள் கிடங்கு காப்பாளர்களாகவும் கைமாற்றும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் கார்களை பயன்படுத்தி போதைப் பொருளை விநியோகித்து வந்துள்ளனர்.

மேலும் போதைப் பொருட்களை பதுக்கி வைக்க இந்த வீடு பயன்படுத்தப்பட்டு வந்தது.

குறிப்பாக அண்டை நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்துவதற்கு கூரியர் சேவைகளையும் இவர்கள் பயன்படுத்தியதாக அவர் கூறினார்.

இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக இருந்தவர் இன்னமும் தலைமறைவாக உள்ளார்.

அவரை தேடும் பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset