நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உரிமை மறுக்கப்பட்ட குடியுரிமை என்ற வார்த்தையை பயன்படுத்துவதை முதலில் நிறுத்துங்கள்: சைபுடின்

கோலாலம்பூர்:

கைவிடப்பட்ட குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கும் போது குடியுரிமைக்கான உரிமை மறுக்கப்பட்டது என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தயவுசெய்து நிறுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் வலியுறுத்தினார்.

குடியுரிமை தொடர்பான அரசியலமைப்பில் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படும்போது அதற்கு பதிலாக அரசாங்க, எதிர்க்கட்சி பிரதிநிதிகள் விவாதத்தில் பங்கேற்க வேண்டும்.

குழந்தைகளின் உரிமைகள் உத்தரவாதம், கவனிப்பு என்பதை உறுதிப்படுத்த அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.

ஒருவர் குடிமகனாக இருக்கும் உரிமை மறுக்கப்பட்டது என்ற வார்த்தையை முதலில் நீங்கள் நிறுத்துங்கள்.

இப்போது, ​​பிரிவு 19பி மூலம் நாம் குடியுரிமை பெற முடியாவிட்டால், பிரிவு 15ஏ கூட்டாட்சி அரசியலமைப்பு கீழ் குடியுரிமை நடைமுறையை செயல்படுத்துகிறோம் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset