நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

8.1 மில்லியன் டன்கள் விற்கப்படாத ரமலான் சந்தை உணவு பாதுகாக்கப்பட்டது

சபாக் பெர்ணம்:

நாட்டில் 8.1 மில்லியன் டன்கள் விற்கப்படாத ரமலான் சந்தை உணவு  வீசப்படாமல் பாதுகாக்கப்பட்டது.

உள்நாட்டு வாணிப வாழ்க்கை செலவினத்துறை துணையமைச்சர் பௌசியா சாலே கூறினார்.

ரமலான் பசாரி மொத்தம் 8.1 மில்லியன் மெட்ரிக் டன் உணவு, பானங்கள் ஆறு நாட்கள் நோன்பின் ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

மைசேவ்பூட் திட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்ட மொத்த உணவு, பானத்தின் மதிப்பு 116,000 ரிங்கிட்டாகும்.

இந்த பிரச்சாரத்தை அமைச்சு, ஜெமா எனும் இளைஞர் அமைப்புடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.

கடந்த ஆண்டு மட்டும், 55 ரமலான் பசார்களில் இத்திட்டத்தை செயல்படுத்தினோம்.

மேலும் 281,000 ரிங்கிட் மதிப்புள்ள 25 டன் உணவை வீணாக்காமல் காப்பாற்ற முடிந்தது.

சபாக் பெர்னாமில் உள்ள ரஹ்மா ரமலான் பசாருக்குச் வருகை தந்த பின் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset