நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஃபாடில்லாவின் எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பு; புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வழி வகுக்கும்: பெர்சே 

கோலாலம்பூர்:

துணைப் பிரதமர் ஃபாடில்லா யூசுப்பும் எதிர்கட்சித் தலைவர்களும் சந்தித்து பேசியுள்ளனர்.

இந்த சந்திப்பு இரு தரப்பினருக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வழிவகுக்கும் என்று பெர்சே நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் கூட்டணியால் வழங்கப்பட்ட 10 தேர்தல்,நிறுவன சீர்திருத்தங்களை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ளடக்கியிருக்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்கள், தலைவர் நியமனம் சீர்திருத்தம், தேர்தல் முறைமைகள், சட்டங்களை மேம்படுத்துவது குறித்த அறிக்கைகளை வகைப்படுத்துதல், தேர்தல் குற்றச் சட்டம் சீர்திருத்தம், அரசியல் நிதி சீர்திருத்தம் ஆகியவை அதில் அடங்கும்.

நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வரும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் மத்தியில் நிலவும் பகுதி மேம்பாட்டுப் பங்கீடு பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்த சந்திப்பு நல்ல, உடனடி முடிவுகளை அடைய முடியும் என்று பெர்சே நம்புகிறார்.

-பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset