நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காலுறை சர்ச்சை தொடர்பான நிறுவனத்தின் வணிக உரிமம் ரத்து

பத்துபகாட்:

அல்லாஹ் என்ற வார்த்தை கொண்ட காலுறை சர்ச்சையில் சிக்கிய நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

சின் ஜியான் சாங் எனும் அந்நிறுவனத்தின் உரிமத்தை பத்துபகாட் மாநகர் மன்றம் (எம்பிபிபி) ரத்து செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சின் ஜியான் சாங், சோ ஹுய் சான் ஆகியோரிடம் உரிமம் ரத்து செய்யப்பட்டதற்கான நோட்டீஸ் சமர்ப்பித்து.

இதனை பத்துபகாட் மாநகர் மன்றம் ஓர் அறிக்கையின் வாயிலாக கூறியுள்ளது.

சம்பந்தப்பட்ட நிறுவனறத்திம் உரிமையாளர்களுடனான இந்த சந்திப்பு நேற்று மெனாரா எம்பிபிபி நடந்தது.

எம்பிபிபியின் வர்த்தகம், வணிகம் மற்றும் தொழில்துறை உரிமம் சட்டம் 2016 இன் கீழ் தொழிற்சாலைக்கு இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது என்று எம்பிபிபி தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset