நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நான் வெளிநாடுகளுக்குச் செல்வது ஜாலியாக இருக்க அல்ல: பிரதமர்

கோலாலம்பூர்:

நான் வெளிநாடுகளுக்கு சென்வது ஜாலியாக இருக்க அல்ல என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

ஜெர்மனி உட்பட பல வெளிநாடுகளுக்குச் சென்றது அலுவல் ரீதியான அதிகாரப்பூர்வ பயணமாகும்.

சில தரப்பினர் குற்றம் சாட்டுவது போல் ஜாலியாக இருக்க அல்ல.

மலேசியாவின் நன்மைக்காக சமீபத்தில் வணிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த பயணம் அரசாங்க அதிகாரத்தையும் பணத்தையும் துஷ்பிரயோகம் செய்ததாக சில தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பிரதமர், துணைப் பிரதமர் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.

அதிகார துஷ்பிரயோகம், நிறைய பணம் செலவழித்தல், அரசாங்க விமானங்களில் செல்வது, விடுமுறைக்கு செல்வது என்று பலவிதமான குற்றச்சாட்டுகளால் நாம் தாக்கப்படுகிறோம்.

இந்த விவகாரத்தில் எனக்கு பதில் இல்லை. ஆனால் அனைவரும் என்னை நம்புங்கள்.

ஐந்து நாட்கள் ஜெர்மனியில் இருந்தேன். நான் எந்தவொரு கடைக்கும் செல்லவில்லை.ம

தன்குவிடுதிக்கும் கூட்டத்திற்கும் செல்வதை தவிர எனக்கு வேறு வேலை இல்லை என்று இன்று காலை பிரதமர் துறையில் மாதாந்திர கூட்டத்தில் பேசிய பிரதமர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset