நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாடு தரவு தளம் பாதுகாப்பானது: ரபிசி ரம்லி உறுதி 

பெட்டாலிங் ஜெயா:

 ஒவ்வொரு வாரமும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான முடக்கும் நடவடிக்கைகளை எதிர்க்கொண்டாலும், பாடு தரவு தளம் பாதுகாப்பாகவுள்ளது என்று பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி தெரிவித்தார். 

இந்தத் தரவு தளம் ஜனவரி 2-ஆம் தேதி தொடங்கப்பட்டதிலிருந்து பல்வேறு முடக்க நடவடிக்கைகளை எதிர்கொண்டதாக அவர் கூறினார்.

கணினி மேம்பாட்டுக் குழு எடுத்த விரைவான நடவடிக்கையின் விளைவாக பாடு தளம் தற்போது வரை பாதுகாப்பாக உள்ளது என்றார் அவர். 

(ஜிபிஎஸ்-அடிப்படையிலான கண்காணிப்பு தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 

இதன் மூலம், மலேசியாவில் மட்டுமே பாடுவை புதுப்பிக்க முடியும் என்று அவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.

மார்ச் 10 ஆம் தேதி வரை பாடுவில் 4,292,912 பேர் தங்கள் தகவல்களைப் பதிவு செய்து புதுப்பித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். 

மேலும், எந்த அமைச்சகம் மற்றும் துறைகளில் தரவு புதுப்பிப்பு இருந்தால், அது தானாகவே பாடு தரவுத்தளத்தில் பிரதிபலிக்கும்.

மக்கள் உரிய பலன்களைப் பெறுவதற்குக் கொள்கை திட்டமிடலுக்காகவும் தரவு திட்ட செயலாக்கத்தை மேம்படுத்துவதற்காகவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset