நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாடு முழுவதும் ஓப்ஸ் ரமலான் நடவடிக்கையைச் சுகாதார அமைச்சகம் தொடர்கிறது

புத்ராஜெயா:

உணவுகள் பாதுகாப்பாக விற்கப்படுவதை உறுதி செய்வதற்காக ரமலான் சந்தை வளாகங்களில்  ஓப்ஸ் ரமலான் நடவடிக்கையைச் சுகாதார அமைச்சு தொடர்கிறது. 

உணவுச் சட்டம் 1983 மற்றும் அதன் கீழுள்ள விதிமுறைகளுக்கு இணங்குவதற்கு கூடுதலாக உணவு தயாரிக்கப்படுகிறதா அல்லது பாதுகாப்பாக விற்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த, உணவு வளாகத்தை ஆய்வு செய்தல், உணவு மாதிரிகள் எடுப்பது ஆகியவை இந்த ஓப்ஸ் ரமலான் நடவடிக்கையில் அடங்கும் என்று சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உள்ளூர் அமலாக்க அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஓப்ஸ் ரமலான் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். 

மேலும், பொதுமக்கள், மூலப்பொருட்கள் வளாகங்கள், உணவு தயாரிக்கும் வளாகங்கள், உணவு விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.

எந்தவொரு இப்தார் உணவைத் தேர்ந்தெடுக்கும் போதும் ரமலான் முழுவதும் உணவுப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

வர்த்தகர்கள் மூலப்பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன்னர் அவற்றைச் சுத்தம் செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset