நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மடானி மருத்துவ உதவித் திட்டம்; 70 மாவட்டங்களிலும் கிடைக்க வேண்டும்: சைட் சாடிக்

கோலாலம்பூர்:

மடானி மருத்துவ உதவித் திட்டம் 70 மாவட்டங்களிலும் கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் இதனை வலியுறுத்தினார்.

மடானி மருத்துவத் திட்டம் இப்போது 10 குறிப்பிட்ட மாவட்டங்களில் கவனம் செலுத்தும் என்று சுகாதார அமைச்சர் ஜூல்கிப்ளி அஹ்மத் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் 2024 வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதியானது மூன்று மாதங்களுக்குள் சிதைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 70 மாவட்டங்களில் கிடைப்பதை உறுதி செய்வதற்கான பட்ஜெட்டை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும்.

பி40 குறைந்த வருமானம் கொண்ட குழுவில் உள்ளவர்கள் அரசு மானிய விலையில் தனியார் கிளினிக்குகளில் சிகிச்சை பெறுவதற்கு,  நாடு முழுவதும் திட்டத்தை செயல்படுத்த அரசாங்கத்தால் இயலாமை குறித்து சைட் சாடிக் கேள்வி எழுப்பினார்.

100 மில்லியன் ரிங்கிட் வரவு செலவுத் திட்டத்தில் இந்நிதி  ஒரு சிறிய பகுதியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset