நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாடாளுமன்றத்தில் ஊனமுற்ற ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது: ஸலிஹா முஸ்தாப்பா 

பெட்டாலிங் ஜெயா:

நாடாளுமன்றத்தில் ஊனமுற்ற ஊழியர்களின் விழுக்காட்டை அதிகரிப்பதற்கான முன்மொழிவுக்கு அரசாங்கம் கவனம் செலுத்தி அதனைப் பரிசீலனை செய்யவுள்ளது. 

2023- ஆம் ஆண்டு நிலவரப்படி, பொது சேவை துறையில் 0.3 விழுக்காடு மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வேலை செய்வதாகப் பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேசத்துக்கான அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தாப்பா தெரிவித்துள்ளார். 

இது 10 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த விகிதமாகும். ஆனால் அரசாங்கம் நிர்ணயித்த இலக்கான ஒரு சதவீதத்தை அடையப் போதுமானதாக இல்லை என்று அவர் குறிப்பிட்டார். 

பொது சேவை துறையில் ஊனமுற்ற தொழிலாளர்களின் விழுக்காட்டை அதிகரிக்கும் முயற்சியில் நாடாளுமன்றத்தில்  மேலும் ஊனமுற்ற ஊழியர்களை பணியமர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அமைச்சரை வலியுறுத்தும் லிம் லிப் எங்-இன் கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். 

கோலாலம்பூர் மாநாகர மன்றத்தில் பணியாற்றும் ஊனமுற்ற ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கூட்டரசு விவகாரங்களுக்கான அமைச்சரை வலியுறுத்துவதாகவும் லிம் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset