நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வாழ்க்கை செலவினங்கள் அதிகரிப்பு சிலாங்கூரில் அதிக விவாகரத்துக்கான காரணங்களில் ஒன்றாகும் 

ஷா ஆலம்: 

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் சிலாங்கூரில் வாழ்க்கைச் செலவினம் அதிகமாக இருப்பதால் அம்மாநிலத்தில் விவாகரத்து சம்பவங்கள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இஸ்லாமிய விவகாரங்களுக்கான தலைவர் டாக்டர் முஹம்மத் ஃபஹ்மி ங்கா கூறினார்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ற வருமானம் வழங்கப்படாத சூழல் பல்வேறு மோசமான உளவியல் மற்றும் சமூக தாக்கங்களைக் கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

வீட்டு வருமானம் செலவுகளை ஈடுசெய்ய முடியாதபோது, ​​​​மக்கள் வெளியே சென்று போதிய செலவுகளை ஈடுகட்ட பகுதிநேர அல்லது கூடுதல் வேலைகளைத் தேட நிலை ஏற்பட்டுள்ளது. 

வருமானம் ஈட்டுவதிலியே முழு கவனம் செலுத்துவதால் மக்கள் தங்களின் பிள்ளைகளுடன் செலவிடும் நேரம் குறைவதாகவும் சிலாங்கூர் மாநில சட்டமன்ற (DUN) அமர்வில் அவர் தெரிவித்தார்.

2023-ஆம் ஆண்டில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது சிலாங்கூரில் அதிக விவாகரத்து விகிதத்திற்கு வழிவகுக்கும் காரணிகள் குறித்து முய்சுதீன் மஹ்யுதினின் கேள்விக்கு ஃபஹ்மி இவ்வாறு பதிலளித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தின் துரித வளர்ச்சியும் மாநிலத்தில் விவாகரத்து விழுக்காடு அதிகரிப்பதற்கான காரணிகளில் ஒன்றாகும் என்றார் அவர். 

கிள்ளான் பள்ளத்தாக்கின் துரிதமான பொருளாதார வளர்ச்சியின் விளைவாக சிலாங்கூர் பொருளாதார வளர்ச்சியின் அனைத்து துறைகளுக்கும் முக்கிய மையமாக மாறியுள்ளது. 

பல வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதன் விளைவாக சிலாங்கூரில் மக்கள் தொகை அதிகரிக்கின்றது. 

இதற்கிடையில், குடும்பத்தில் உள்ள உரிமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான தகவல்கள் சமூக ஊடக தளங்கள் மூலம் பரவலாகப் பகிரப்படுகின்றன.

மேலும் சமூகம் குடும்பத்தில் தங்கள் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை நன்கு புரிந்துகொள்வதற்கான ஒரு காரணியாகும்.

அரசு அல்லது தனியார் ஏஜென்சிகளால் வழங்கப்படும் சியாரி வழக்கறிஞர்களின் சேவைகளுக்கான அணுகல், சிலாங்கூரில் உள்ள மக்கள் சரியான நீதித்துறை மற்றும் சட்ட அமைப்பு மூலம் தங்கள் உரிமைகளைப் பெற உதவுவதாகக் கருதப்படுகிறது.

இது சிலாங்கூரில் அதிக எண்ணிக்கையிலான விவாகரத்துகளுக்குப் பங்களிக்கிறது.

எனவே, சிலாங்கூரில் விவாகரத்துக்கான காரணங்களைக் கண்டறிய எந்தவொரு நிறுவனம் அல்லது நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி நிபுணர்களால் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சிலாங்கூர் சிரியா நீதித்துறை (ஜேக்ஸ்) பரிந்துரைக்கின்றது.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset