நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

17 மில்லியன் தொழிலாளர்களில் 40% பேர் EPF சந்தாதாரர்களாக இல்லை

கோலாலம்பூர்:

நாட்டில் உள்ள 17 மில்லியன் தொழிலாளர்களில்  40% பேர் EPF சந்தாதாரர்களாக இல்லை.

இதனை ஈபிஎப் தலைமை நிர்வாக இயக்குநர் அஹ்மத் ஜூர்கர்னைன் ஓன் கூறினார்.

நாட்டில் 17 மில்லியன் தொழிலாளர்களில் 60% அல்லது 10.2 மில்லியன் பேர் மட்டுமே ஈபிஎப்பில் சந்தாதாரர்களாக உள்ளனர்.

இதில் 40 சதவீத பேர் ஈபிஎப் சந்தாதாரர்களாக இல்லை. இத்தனை பேர் பதிவு செய்யாமல் இருப்பது பெரும் கவலைக்குரியது.

உலக சராசரியான 68% உடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கையும் குறைவாகத் தான் உள்ளது.

ஈபிஎப் தரவுகளின்படி தாய்லாந்தில் 49% தொழிலாளர்களும், வியட்நாமில் 43% பணியாளர்களும் மட்டுமே பாதுகாக்கப்படுகிறார்கள்.

பாதுகாக்கப்படாத பெரும்பாலான பணியாளர்கள் முறைசாரா துறையில் உள்ளவர்கள்.

ஃப்ரீலான்ஸர்கள், கிக் தொழிலாளர்கள் போன்ற சுயதொழில் செய்பவர்கள்  இதில் உட்படுகிறார்கள்.

குறைந்தபட்ச ஊதியமாக 1,500 ரிங்கிட்ட சம்பாதிக்கும் ஊழியர், 3% வருடாந்திர சம்பள உயர்வுடன் 55 வயதை அடையும் போது  479,000 ரிங்கிட்டை சேமிக்க முடியும் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset