நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்எச் 370ஐக் கண்டுபிடிப்பதற்கான  ஓஷன் இன்ஃபினிட்டியை சந்திக்க அரசு தயாராக உள்ளது: லோக்

கோலாலம்பூர்:

எம்எச் 370 ஐக் கண்டுபிடிப்பதற்கான  ஓஷன் இன்ஃபினிட்டியை சந்திக்க அரசு தயாராக உள்ளது.

போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இதனை தெரிவித்தார்.

மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச் 370 மர்மமான முறையில் காணாமல் போன 10ஆவது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த விமானத்தை தேடுதல் பணியை மீண்டும் தொடங்குவதற்கான உறுதிப்பாட்டை அரசு கொண்டுள்ளது.

குறிப்பாக, அமெரிக்காவை தளமாகக் கொண்ட கடல் ரோபோட்டிக்ஸ் நிறுவனமான ஓஷன் இன்ஃபினிட்டி லிமிடெட் உடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட அரசாங்கத்திற்கு அமைச்சரவை அனுமதியை தனது தரப்பு கோரும்.

மலேசிய அரசாங்கத்தின் நிலைப்பாடு நிலையானது.

புதிய தகவல்கள், நம்பகமான ஆதாரங்கள் கிடைக்கும் போது தேடுதல் நடவடிக்கையை நீட்டிப்பது குறித்து பரிசீலிப்போம் என்று லோக் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset