நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாகான் டத்தோவில் புதிய நகர் திட்டம்; அனைத்து அரசு அலுவலகத்தையும் உள்ளடக்கியிருக்கும்: ஜாஹித்

பாகான் டத்தோ:

மாவட்டத்தின் திறனை விரிவுபடுத்துவதற்காக பண்டார் பாரு பாகன் டத்தோ என்ற புதிய நகரத்தை உருவாக்க அரசாங்கம் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது.

இதனை துணைப் பிரதமரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அஹ்மட் ஜாஹித் ஹமிடி கூறினார்.

இப்புதிய நகரில் போலீஸ் தலைமையகம் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலகங்களும் இங்கு மாற்றப்படும்.

இத்திட்டத்திற்காக 385 ஏக்கர் (155 ஹெக்டேர்) நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது  என்றார்.

புதிய நகரத்தின் வளர்ச்சி பேராக்கின் புதிய மாவட்டமாக இருக்கும் பாகன் டத்தோவுக்கு ஏற்ப உள்ளது.

ஏனெனில் தற்போதுள்ள நகரத்தில் வளர்ச்சிக்கு இடமில்லை.

பெக்கான் சிம்பாங் அம்பாட், ஊத்தான்  மெலிந்தாங்கில் நெரிசலைக் குறைப்பதற்காக மேம்பாலம் கட்டுவதற்கு 500 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பண்டிகை விடுமுறை நாட்களில் இது சிம்பாங் அம்பாட்டிலிருந்து பாகன் டத்தோ வரையிலான நான்கு வழிச் சாலையை இணைக்கும்.

இது முன்னர் ரத்து செய்யப்பட்ட திட்டமாகும் என்று டத்தோஸ்ரீ ஜாஹித் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset