நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனிதவள அமைச்சின் அனைத்து திட்டங்களும் கெசுமா எனும் முத்திரையுடன் மேற்கொள்ளப்படும்

புத்ராஜெயா:

மனிதவள அமைச்சு தொடர்பான அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்வுகளும்  திட்டங்களும் கெசுமா என்ற முத்திரையுடன் நடத்தப்படும்

இதனை மனிதவள அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக அறிவித்தது.

கடந்த  வெள்ளிக்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கெசுமா மறுபெயரிடுவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது.

இந்த இரண்டு மாதங்களில், 3கே திட்டங்களுக்கு இணங்க கெசுமா தொழிற்சங்கங்களுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தியது. 

மலேசிய தொழில்துறை நீதிமன்ற நிறுவனத்தில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியது.

தொழிலாளர்களின் ஊதிய உரிமைகளை உறுதியாக வலியுறுத்தியது.மேலும் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கவரேஜை விரிவுபடுத்தியது.

திறன் பயிற்சியின் தரத்தை மேம்படுத்துவது மற்றும் அமைச்சின் அனைத்து துறைகள், நிறுவனங்களில் நிர்வாகத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகளை செயல்படுத்துவதும் இதில் அடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset