நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முஃபகாத் நேஷனலை புதுப்பிக்க பாஸ் கட்சியின் அழைப்பு நேர்மையற்றது: ஜாஹித்

சைபர்ஜெயா:

முஃபகாத் நேஷனலை புதுபிக்கும் பாஸ் கட்சியின் அழைப்பு நேர்மையற்றது என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.

நாட்டின் இரண்டு பெரிய மலாய்க் கட்சிகளுக்கிடையே 2019 இல் உருவாக்கப்பட்ட தேர்தல் கூட்டணியாக முஃபகாத் நேஷனல் தோற்றுவிக்கப்பட்டது.

இந்த கூட்டணியை மீண்டும் புதுப்பிக்க  பாஸ் முன்மொழிந்துள்ளது. இது நேர்மையற்றது.

இஸ்லாமிய கட்சி கூட்டணியில் இருந்து விலகியது மட்டுமின்றி, தாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் மீறிவிட்டது.

எங்கள் முதுகில் குத்தினார்கள். அவர்களின் சலுகை நேர்மையானது என்று நான் நினைக்கவில்லை.

ரிஸ்டா நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ ஜாஹித் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset