நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்ரேலுக்கு வேறு வழியில்லை, உலகத்தின் சக்தி பெரியது: முஹம்மது ஹசான்

ரெம்பாவ்:

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் நடவடிக்கைகள், பாலஸ்தீனியர்களின் உரிமை மீறல்களுக்கு சர்வதேச கண்டனம் தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

வெளியுறவுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் இதனை தெரிவித்துள்ளார்.

ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் 52 நாடுகள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த சமீபத்தில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுமே இஸ்ரேலைக் கண்டித்து பேசின. 

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு வாரியம் இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பல தீர்மானங்கள் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு வாரியத்தில் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், இஸ்ரேல் பிடிவாதமாக உள்ளது.

சர்வதேச நடைமுறைகள், சட்டங்களை அப்பட்டமாக மீறும் செயல்களை தொடர்ந்து செய்து வருவதாக முஹம்மது ஹசான் கூறினார்.

சர்வதேச நீதிமன்றத்தில் அனைத்து நாடுகளும் தங்கள் ஆட்சேபனைகளையும் கருத்துக்களையும் உறுதியாக முன்வைத்தன. 

இரண்டு மூன்று நாடுகள் இஸ்ரேலை ஆதரித்தாலும், அவர்களின் குரல் எடுபடவில்லை.

இம்முறை இஸ்ரேலுக்கு பல தேர்வுகள் இல்லை. பாலஸ்தீனம் சுதந்திரமான அங்கீகரிக்கப்பட்ட இரு நாடுகளின் அமைப்பை நிறுவுவதன் மூலம் நிரந்தர போர் நிறுத்தத்திற்கான சாலை வரைபடத்தை முன்வைப்பதில் நாங்கள் இணைந்தோம். 

இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset