நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புகைப் பிடிப்பவர்கள், கடை உரிமையாளர்களுக்கு ஆதரவாக திட்டம் தீட்டக் கூடாது: மலேசிய மருத்துவ சங்கம்

கோலாலம்பூர்:

புகைப்பிடிக்கும் பகுதிகள் நிறுவப்படும் திட்டங்களை மலேசிய மருத்துவ சங்கம் ஆதரிக்கிறது.

ஆனால் இந்த முயற்சியை கவனமாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.

சரியான முறையில் செயல்படுத்தப்பட்டால், புகைபிடித்தல் இயல்பானது அல்ல என்ற அணுகுமுறையில் படிப்படியான மாற்றத்திற்கு பங்களிக்கும்.

மலேசியாவின் தேசிய புற்றுநோய் சங்கம் எடுத்த நிலைப்பாட்டை மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் அஸிசான் அப்துல் அஜீஸ் கூறினார்.

இம்முயற்சியை வெற்றியடையச் செய்வதற்கு பொருத்தமான இடங்களை அடையாளம் காண சுகாதார அமைச்சு, நகராட்சி மன்றங்கள், வளாகங்களின் உரிமையாளர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அஸிசான் பரிந்துரைத்தார்.

இந்த முடிவுகளில் பொது சுகாதாரமே முதன்மையாக இருக்க வேண்டும். கடை உரிமையாளர்கள், புகைப்பிடிப்பவர்களின் வசதிக்காக திட்டங்கள் தீட்டப்படக்கூடாது.

புகைபிடிக்காதவர்களுக்கு புகைபிடிப்பதைத் தடுக்க நியமிக்கப்பட்ட புகைபிடிக்கும் பகுதிகள், நெரிசலான பகுதிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset