நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

BREAKING NEWS: துன் தாயிப் காலமானார்

கோலாலம்பூர்:

சரவா மாநில முன்னாள் ஆளுநர் துன் தாயிப் மஹ்மூத் இன்று காலை கோலாலம்பூரில் மரணமடைந்தார்.

கோலாலம்பூர் சிவிஎஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை 4.28 மணிக்கு காலமானார்.

சரவா மாநில சுற்றுலா, படைப்பாற்றல் தொழில், கலைநிகழ்ச்சிகள் அமைச்சர் டத்தோ அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா இதனை உறுதிப்படுத்தினார்.

துன் தாயிப்பின் உடல் இன்று கூச்சிங்கிற்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு கோலாலம்பூர் தேசியப் பள்ளிவாசலில் வைக்கப்படும்.

மேலும் சரவா மாநில சட்டமன்றத்தில் 87 வயது துன் தாயிப்பிற்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset