நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

68 ஆண்டுகளுக்குப் பிறகு பண்டா ஹிலிர் மெர்டேக்கா முழக்கத்தால் அதிர்ந்தது

மலாக்கா:

68 ஆண்டுகளுக்குப் பிறகு மலாக்கா பண்டா ஹிலிர் மெர்டேக்கா முழக்கத்தால் அதிர்ந்தது.

இந்த தேதியில் பண்டா ஹிலிர் திடலில் காலனித்துவ பிடியில் இருந்து முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் நாட்டின் சுதந்திர தேதியை அறிவித்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

சுமார் 68 ஆண்டுகளுக்கு முன்பு துங்கு அப்துல் ரஹ்மான் நாட்டின் சுதந்திரத்தை முதன் முதலில் அறிவித்த பிறகு முதன்முறையாக இந்தக் கொண்டாட்டம் நடத்தப்பட்டதால் இது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகக் கருதப்படுகிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மலாக்கா முதல்வர் டத்தோஸ்ரீ அப்துர் ரவூப் யூசோப் ஆகியோர் தலைமையில் எம்4442 என்ற பதிவு எண் கொண்ட பழங்கால கார் மூலம் ஊர்வலம் ஸ்டாதுஸ் சிவப்பு கட்டிடத்தில் இருந்து சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு சுதந்திர நினைவு சதுக்கத்தை நோக்கி ஊர்வலம் தொடங்கியது.

சதுக்கத்தின் பிரதான மேடைக்கு அவர் வந்தவுடன், துங்கு அப்துல் ரஹ்மான் வேடத்தில் அன்வார் இருந்தார்

அதே போன்று மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தும் சம்பந்தன் போன்று உடை அணிந்து இருந்தார்.

அப்போது அவர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு மாலை அணிவித்து சிறப்பித்தார்.

சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங், துன் டான் செங் லாக் பாத்திரத்தில் நடித்தார்.

துங்கு அப்துல் ரஹ்மான் வேடத்தில் நடித்த அன்வர், மலாயா கூட்டமைப்பு சுதந்திரப் பிரகடனத்தின் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் சுதந்திரப் பிரகடனத்தை வாசிக்கும்போது, ​​மூன்று முறை மெர்டேக்கா என கோஷமிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset