நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மன்னிப்பு வாரியத்தின் ஆவணங்கள் ரகசியமானவை அல்ல: நஜீப் வழக்கறிஞர்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் சிறைத் தண்டனை, அபராதத்தை குறைப்பதற்கான மன்னிப்பு வாரியத்தின் முடிவு தொடர்பான ஆவணங்கள் ரகசியமானவை அல்ல.

முன்னாள் பிரதமரின் வழக்கறிஞரான டான்ஸ்ரீ ஷாஃபி அப்துல்லாஹ் இதனைக் கூறினார்.

ஆவணங்களின் உள்ளடக்கங்களை வெளியிட நஜீப்பின் அனுமதி பெறப்படவில்லை.

இருந்தாலும் பிப்ரவரி 7 அன்று முந்தைய மன்னரின் முத்திரை தாங்கிய கடிதத்தை நீதிமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் மட்டுமே காட்டினேன்.

இந்த ஆவணங்கள் ரகசியமாக இருப்பதால் அல்ல. ஆவணங்களின் ரகசியத்தன்மைக்கும் தனது முடிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை .

அவை பொது ஆவணங்கள். அதனால் நஜீப்பின் அனுமதியை நான் பெறவில்லை  என்று அவர் ஷாஃபி அப்துல்லாஹ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset