நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேளிக்கை வரிக் குறைப்பு தீம் பார்க் தொழில் துறைக்கு புத்துயிர் அளிக்கும்: டான்ஶ்ரீ ரிச்சர்ட்

சுபாங்:

நாட்டில் கேளிக்கை வரிக் குறைக்கப்பட்டது தீம் பார்க் தொழில் துறைக்கு புத்துயிர் அளித்துள்ளது.

மாட்ஃபாவின் கௌரவத் தலைவர் டான்ஸ்ரீ ரிச்சர்ட் சிகே கோ இதனை தெரிவித்தார்.

ஃபன்பேர் தொடங்கி இன்று பல பில்லியன் வெள்ளி முதலீடு செய்யும் துறையாக இந்த தீம் பார்க் விளங்கி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் இத் துறையில் பணியாற்றி வருகின்றனர்.

மிகவும் தரமாகவும் நியாயமான கட்டணங்களுடன் இந்த தீம் பார்க்குகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலை நீடிக்கும் வகையில் ஆசியாவிலேயே தீம் பார்க்கின் தலைமையகமாக மலேசியா விளங்கும்.

நாட்டில் உள்ள தீம் பார்க், குடும்பங்களுக்கான உல்லாச மையங்களை ஒன்றிணைக்கும் நோக்கில் தான் மாட்ஃபா அமைப்பு செயல்பட்டு வருகிறது.

May be an image of 8 people and table

இந்நிலையில் மாட்ஃபா சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பு இன்று நடைபெற்றது.

நிதி துணையமைச்சர் லிம் ஹுய் இங், சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு உட்பட பல பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்கு பின் பேசிய டான்ஸ்ரீ ரிச்சர்ட், 2024ஆம் ஆண்டில் மாட்ஃபா பல இலக்குகளை கொண்டுள்ளது. குறிப்பாக மாநிலம் முழுவதும் மக்களை ஈர்க்கும் பொழுதுப் போக்கு மையங்களை அமைப்பதில் அதில் ஒன்றாகும்.

மேலும் மத்திய அரசு கேளிக்கை வரியை 25 சடவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைத்துள்ளது.

சிலாங்கூர், பினாங்கு மாநிலங்களில் அந்த வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இது தீம் பார்க் தொழில் துறைக்கு புத்துயிரை அளித்துள்ளது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset