நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரிசி தட்டுப்பட்டால் மக்கள் பாதிப்பு வேடிக்கை பார்க்கிறதா அரசு?: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

நாட்டில் நிலவி வரும் அரிசி தட்டுப்பாட்டால் மக்கள் பெரும் அளவில் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த விவகாரத்தை அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறதா என்று தேசியக் கூட்டணியைச் சேர்ந்த  டத்தோ சரவணக்குமார் கேள்வி எழுப்பினார்.

அரிசி கார்டலை முறியடிக்கும் நோக்கில் மடானி வெள்ளை அரிசி அறிமுகம் செய்யப்படும் அரசு அறிவித்தது.

அதே வேளையில் இந்த விவகாரத்தில் முடிவு எதுவும் செய்யவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் சந்தையில் அரிசி தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக மக்கள் அடிக்கடி வாங்கும் 5 கிலோ, 10 கிலோவின் அரிசிகளின் விலை பல்மடங்கு உயர்ந்துள்ளது.

புழுங்கல் அரிசியின் கையிருப்பும் மிகக் குறைவாக உள்ளது. பல இடங்களில் மக்கள் வாங்குவதற்கு அரிசி இல்லை. 

மக்களின் அத்தியாவசிய உணவு பொருளான அரிசிக்கே தட்டுபாடு என்பதால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

ஆகவே இதுபோன்ற விவகாரங்களில் அரசாங்கம் வேடிக்கை பார்க்காமல் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset