நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாய்மொழிப் பள்ளிகளுக்காக போராடியவர்களை பாராட்டுகிறேன்: சிவக்குமார்

புத்ரா ஜெயா:

நம் நாட்டில் சீன, தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து நிலைத்திருக்க போராடிய வழக்கறிஞர்கள் குழு, அரசு சார்ப்பற்ற இயக்கத் தலைவர்கள், சமூக ஆர்வலர் உட்பட அனைத்து தரப்பினரையும் வெகுவாக பாராட்டுகிறேன் என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவக்குமார் தெரிவித்தார்.

இந்நாட்டில் சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் என்று பெடரல் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

மேலும், தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் விண்ணப்பத்தை கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுள்ளதை வரவேற்கிறேன்.

கூட்டரசு நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பானது ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்திற்கு  பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அவர் சொன்னார்.

உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், கூட்டரசு நீதிமன்றம் ஆகியவை தமிழ், சீனப்பள்ளிகள் சட்டப்பூர்வமானவை என்று தீர்ப்பு வழங்கி இருப்பதால் இனி தாய்மொழிப் பள்ளிகள் குறித்து எவரும் இனி கேள்வி எழுப்ப முடியாது என்று முன்னாள் மனிதவள அமைச்சருமான அவர் சுட்டிக் காட்டினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset