நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மோட்டார் சைக்கிளுக்கான முன்பண உதவித் திட்டத்திற்கு மார்ச் 1 முதல் விண்ணப்பிக்கலாம்: பாப்பாராயுடு

ஷாஆலம்:

சிலாங்கூர் மாநிலத்தின் மோட்டார் சைக்கிளுக்கான முன்பண உதவித் திட்டத்திற்கு மார்ச் 1 முதல் விண்ணப்பிக்கலாம் என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு அறிவித்தார்.

பணியாளர்கள் மோட்டார் சைக்கிள்கள் வாங்குவதற்கு உதவும் வகையில் சிலாங்கூர் மாநில அரசு இந்த முன்பண உதவித் திட்டத்தை அறிமுகம் செய்தது.

பைக்கர்-1000 எனும் திட்டத்தின் வாயிலாக பலர் பயன்பெற்றுள்ளனர்.

அவ்வகையில் இவ்வாண்டு உதவித் திட்டத்திற்கான விண்ணப்பம் வரும் மார்ச் 1ஆம் தேதி தொடங்கவுள்ளது.

சிலாங்கூர் மக்கள் இந்த சிறப்புத் திட்டத்திற்கான பாரங்களை சிலாங்கூர் மாநில தலைமையகத்தின்  ஐந்தாவது மாடியில் உள்ள யூபிபிஎஸ் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்ம்.

அல்லது https://drive.google.com/file/d/1ZvyjM4m_fSDQwNbMoZ5GTpWs5jqFeWhR/view?u... எனும் அகப்பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும்.

குறிப்பாக 18 வயது அல்லது அதற்கும் மேல் இருக்க வேண்டும். செல்லுபடியாகும் மோட்டார் சைக்கிள் உரிமம் கொண்டிருக்க வேண்டும.

பைக்கர்-1000 திட்டம் என்பது சிலாங்கூர் அரசாங்கத்தின் முன்முயற்சியாகும்.

இது கிக் அல்லது பி-ஹெய்லிங் தொழிலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கான முன்பணம் செலுத்தும் வகையில் சுமையைக் குறைக்கிறது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset