நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரிசிக் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அடுத்த வாரம் சிறப்புக் கூட்டம்: பிரதமர்

புக்கிட் மெர்தாஜாம்:

அரிசிக் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அடுத்த வாரம் சிறப்புக் கூட்டம் நடத்தப்படும்.

வாழ்வாதார அமலாக்க கண்காணிப்பு வாரியக் குழு கூட்டத்தில் இது முடிவு செய்யப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அரிசியின் விலைக் கட்டுப்பாடு போன்ற அவசரமான விஷயங்களை உள்ளடக்கி முன்னதாகவே நடத்தப்பட வேண்டிய கூட்டம் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசு இந்தக் கூட்டத்தை அடுத்த வாரம் வரை ஒத்திவைக்கிறது.

அக்கூட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட அரிசி விலை குறித்து இறுதி முடிவை எடுப்போம்.

அதன் விலை மிகக் குறைவாக இருக்க முடியாது என்றாலும், விநியோகம் எங்கிருந்து வருகிறது.

ஒப்பந்தக்காரர் யார், அவர்களுக்கு எவ்வளவு லாபம் என்பதை மீண்டும் கவனமாகப் பார்த்து அதன் வாயிலாக விலையை குறைக்க முடியும்.

பண்டார் பெர்டாவில் மடானியின் மலிவு விற்பனைத் திட்ட நிகழ்வில் பேசிய பிரதமர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset