நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷரியா விவகாரத்தில் சிலாங்கூர் சுல்தானின் உத்தரவு சரியான நேரத்தில் வெளி வந்துள்ளது: பிரதமர்

புத்ராஜெயா:

ஷரியா விவகாரத்தில் சிலாங்கூர் சுல்தானின் உத்தரவு சரியான நேரத்தில் வெளிவந்துள்ளது என்று பிரதமர் டத்தோஶ்ரீ  அன்வார் இப்ராஹிம் கூறினார்.

கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பையும், நாட்டின் முக்கிய சட்டமாக மத்திய அரசமைப்புச் சட்டத்தின் நிலைப்பாட்டையும் அனைத்துத் தரப்பினரும் மதிக்க வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராஃபுதீன் இத்ரிஸ் ஷா உத்தரவிட்டுள்ளார்.

சிலாங்கூர் சுல்தானில் இந்த உத்தரவை மத்திய அரசு வரவேற்கிறது.

மலேசிய இஸ்லாமிய சமய விவகாரங்கள் வாரியத் தலைவர் என்ற முறையில் சிலாங்கூர் சுல்தானின் உத்தரவு பிப்ரவரி 9 ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பான அரசியல் சூட்டைக் குறைக்க சரியான நேரத்தில் வெளிவந்துள்ளதாகக் கருதுகிறேன் என்று பிரதமர் கூறினார். 

புத்ராஜெயாவில் நடந்த 71ஆவது இஸ்லாமிய வாரியக் கூட்டத்தில் சிலாங்கூர் சுல்தானின் உத்தரவு, தேசிய அரசியலமைப்பின் உணர்வைப் பாதுகாக்கும் உறுதியான அறிக்கையாகக் காணப்படுவதாக டத்தோஶ்ரீ   அன்வார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset