நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷரியா சட்டத்தின் நிலைப்பாட்டை வலுப்படுத்த  தேசியக் கூட்டணி சிறப்புக் குழுவை அமைக்கும்: மொஹைதின் யாசின் 

கோலாலம்பூர்:

ஷரியா சட்டத்தின் நிலைப்பாட்டை வலுப்படுத்த தேசியக் கூட்டணி சிறப்புக் குழு ஒன்றை அமைக்கும் என்று அதன் தலைவர் டான்ஶ்ரீ மொஹைதின் யாசின் கூறினார்.

தேசியக் கூட்டணி ஷரியா சட்டத்தின் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்கும், முஸ்லிம்களின் நலன்களைப் பாதுகாக்கும்.

அதன் அடிப்படையில் ஆய்வு, வழிகளை முன்மொழிவதற்கு ஒரு சிறப்புக் குழுவை தேசியக் கூட்டணி அமைக்கும்.

கிளந்தான் ஷரியா குற்றவியல் சட்டம் (I) சட்டம் 2019 இல் உள்ள 16 விதிகளை நிராகரிப்பதற்கான கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவை மேற்கோள்காட்டி, தேசியக் கூட்டணி வட்டமேசையை கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யும்.

இந்த வட்டமேசை கூட்டத்திற்கு பாஸ் துணைத் தலைவர் இத்ரிஸ் அஹ்மத் தலைமை தாங்குவார்.

மேலும் சிறப்பு குழுவுக்கு பாஸ் கட்சியின் செயலாளர்  தக்கியுத்தீன் ஹசன் தலைமை தாங்குவார்கள்.

அரசியலமைப்பு, இஸ்லாமிய சட்ட வல்லுநர்கள், அறிஞர்கள் பிற தரப்பினர் இதில் இணைக்கப்படுவார்கள் என்றார் அவர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset