நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திரெங்கானு குடிநுழைவுத் துறை அந்நியத் நாட்டினர் வசிக்கும் பகுதிகளில் சோதனை மேற்கொள்ளும்

கோலா திரெங்கானு: 

திரெங்கானு மாநிலக் குடிநுழைவுத் துறை அந்நியத் நாட்டினர் வசிக்கும் பகுதிகளில் சோதனை மேற்கொள்ளவுள்ளது. 

மாநிலம் முழுவதும் பொது விடுமுறை நாட்களில் அமலாக்க அதிகாரிகள் அந்நிய நாட்டினர் அதிகம் வசிக்கும் பகுதிகளை அடையாளம் கண்டுள்ளனர் என்று திரெங்கானு மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குனர் அசார் அப்துல் ஹமீட் தெரிவித்துள்ளார். 

பொதுமக்களின் கருத்துகளின் முடிவுகள் உட்பட அவ்வப்போது கண்காணிப்பு செய்யப்படுகிறது.

வெளிநாட்டினர் பல்வேறு பொருட்களை வாங்குவதற்கு வெளியே செல்வதையும், ஒவ்வொரு வார விடுமுறையிலும் அப்பகுதியில் வேறு இடங்களில் வேலை செய்யும் தங்கள் தோழர்களைச் சந்திப்பதையும் கண்டறிந்தனர்.

சட்டப்பூர்வமாகவும், சரியான ஆவணங்கள் ஏதுமின்றி மாநிலத்திற்குள் நுழைந்து வேலை செய்யும் வெளிநாட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை குறித்த தகவல்களைத் தங்கள் தரப்பு சேகரித்து வருவதாகவும் அவர் கூறினார். 

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சீன புத்தாண்டு விடுமுறையின் போது வெளிநாட்டினரின் வருகை குறித்து கருத்து தெரிவித்த அவர் மாநிலத்தில் பல இடங்களில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் இருப்பதாகத் தகவல் கிடைத்ததை உறுதிப்படுத்தினார்.

உளவுத்துறையின் கண்காணிப்பின் விளைவாகச் சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர்களின் குடியிருப்பு மற்றும் பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset