நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி வடமலேசியப் பல்கலைகழகத்தில் முனைவர் படிப்பைத் தொடர்கிறார்

கோலாலம்பூர்: 

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வடமலேசியப் பல்கலைகழகத்தில் தனது முனைவர் படிப்பைத் தொடர்கின்றார். 

இது குறித்து அவர் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார். 

அப்பதிவில் பல்கலைகழகத்தின் அடையாள அட்டையைப் பதிவேற்றம் செய்ததோடு மீண்டும் தாம் மாணவர் பருவத்திற்கு திரும்புவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இது தன் வாழ்நாள் கற்றல் என்று அவர் தெரிவித்துள்ளார். 

64 வயதான இஸ்மாயில், மலாயாப் பல்கலைகழகத்தில் சட்டத் துறையில் பட்டம் பெற்றார். 

பின்னர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அரசியலில் நுழைவதற்கு முன்பு 1985-ஆம் ஆண்டில் வழக்கறிஞராகப் பணிப்புரிந்தார்.

பல்கலைக்கழகத்தில் மூத்த விரிவுரையாளராகவும் இருக்கும் அவரது முன்னாள் மூத்த அதிகாரி கமாருல் ஜமான் யூசோஃப் அவரது முனைவர் படிப்பின் ஆய்வறிக்கை ஆலோசகராக இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

கோவிட்-19 நோய் தொற்றைக் கையாள்வதில் நாடு முன்னெடுத்த  நடவடிக்கைகள் குறித்து அவர் ஆய்வினை மேற்கொள்ளவிருக்கின்றார். 

கோவிட்-19 நோய் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் சிறந்த நாடுகளில் ஒன்றாக மலேசியா உலக சுகாதார அமைப்பால் (WHO) அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

தொற்றுநோயை நிர்வகிப்பதில் எந்த நாட்டையும் முன்மாதிரியாகப் பயன்படுத்த முடியாது என்று இஸ்மாயில் கூறினார்.

மலேசியாவின் அனுபவமும் செயல்களும் COVID-19 க்கு எதிராக எவ்வாறு போராடுகின்றன என்பதை உலகம் காணும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் மேலும் கூறினார்.

இஸ்மாயில் சப்ரியின் பகிர்வு நெட்டிசன்களிடமிருந்து நேர்மறையான கருத்துக்களைப் பெற்றது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset